السّلام عليكم ورحمة الله وبركاته
கல்லூரியின் வளர்ச்சியில் பங்கெடுப்போம்.
எமது நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியானது ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஆறு தசாப்தங்களையும் தாண்டி, அல்லாஹ்வின் உதவியால் தனது இலக்கை நோக்கி தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. (அல்ஹம்துலில்லாஹ்)
இஸ்லாமிய ஷரீஆவை ஆழமாகக் கற்ற நூற்றுக் கணக்கான உலமாக்களையும் பட்டதாரிகளையும் புனித அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களையும் உருவாக்கி, சமூக மாற்றத்தில் பெரும்பங்காற்றி வருகின்ற, எமது கல்லூரியின் எதிர்கால வளர்சசிக்கான பல்வேறு சிறந்த செயற்றிட்டங்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, எமது கல்லூரியிலிருந்து பட்டம்பெற்று வெளியாகிய உலமாக்களின் தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், தாங்களும் இக்கல்லூரியின் மௌலவிப் பட்டதாரி என்ற வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து, எமக்குக் கிடைக்கச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
“அல்லாஹ் எம் அனைவரது நற்செயல்களையும் அங்கீகரித்து உயர்ந்த கூலியை தந்தருள்வானாக.”
For More Details :
தபாலிட :
பொதுச் செயலாளர், ந.உ.அ.கல்லூரி, அரபுக் கல்லூரி வீதி, மூதூர் – 05.
வட்ஸ்அப் இல்
Ashsheikh SM. Isar (Nathwi), B.A – 0772295735
மேலதிக தொடர்புகளுக்கு :
Ashsheikh AWM. Risath (Nathvi), B.A (Hons.) : 0779359624 / 0759359624
Ashsheikh SM. Isar (Nathwi), B.A – 0772295735
Ashsheikh MM. Zuhri (Naleemi), B.A – 0776031526
For Fill the Form




Leave a Reply